இளைஞரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (18:33 IST)
கிராமத்தின் பிரச்சனைகளை கூற வந்த  இளைஞரை எம்.எல்.ஏ ஒருவர் கன்னத்தில் அறைந்தம் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துமகூன் பாவகடாவில்  உள்ள தாசில்தார் அலுவலகத்தில்  வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ வெங்கடரமணப்பா பங்கேற்றார். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து அவர் வெளியே செல்லும்போது,  நாகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவரிடம், தங்கள் கிராமத்தில், சாலை, பேருந்து, குடி நீர் வசதி இல்லை எனவும் தங்களை யாரும் வந்து சந்தித்து குறைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை என புகார் கூறினார்.

இதைக் கேட்டு ஆத்திரம் கொண்ட எம்.எல்.ஏ  இளைஞரை திட்டியதுடன் அவரைக் கன்னத்தில் அறைந்தார்.இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. எம்.எல்.ஏவின் செயலுக்கு விமர்சனங்கள் வலுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்