சூர்யா பட பாணியில் தங்கம் கடத்திய நபர் கைது !

வியாழன், 21 ஏப்ரல் 2022 (15:59 IST)
அரபுதாபியில் இருந்து புது  டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு தங்கம் கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் கேல.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் அயன். இப்படத்தில் சூர்யா விமான நிலையத்தில் அதிகாரியகளுக்கு தெரியாமல் வெளி நாட்டில் தங்கம் கடத்துவருவார்.

அதேபோல், ஒருவர் தலைமுடியை வெட்டிவிட்டு, தங்கத்தை பேஸ்ட் போன்று மாற்றி அதை தலையில் வைத்து, அதன் மேல் விக் வைத்து அபுதாபி யில் இருந்து, புது தில்லிக்கு  இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த   முயற்சித்த நபரை  அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர் கடத்திய தங்கத்தின் எடை 630.45 கிராம்.  இது இந்திய மதிப்பில் சுமர் ரூ.30.55  லட்சம் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்