மணிப்பூர் வன்முறையால் இடம்பெயர்ந்த மக்களுக்கு மிசோரம் அரசு செய்யும் உதவி..!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (13:26 IST)
மணிப்பூரில் கடந்த சில வாரங்களாக வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் அம்மாநிலத்திலிருந்து அண்டை மாநிலமான மிசோரம் மாநிலத்திற்கு ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் மணிப்பூர் வன்முறையால் இதுவரை 12,000 பேர் மிசோரம் மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து உள்ளனர். இதனை அடுத்து தங்கள் மாநிலத்திற்கு வந்த மணிப்பூர் மாநில மக்களுக்கு வசதிகள் செய்து தர மத்திய அரசு நிதி வழங்காததால் நன்கொடை மூலம் நிதி திரட்ட மிசோரம் அரசு திட்டமிட்டுள்ளது.
 
இதற்கென தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழுவில் மாநில அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் அதிகாரிகள் ஆகியோரிடம் நிதி திரட்டப்பட்டு வருவதாகவும் அந்த நிதியில் இருந்து மணிப்பூரில் இருந்து வந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மிசோரம் மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்