என் உருவ பொம்மையை எரியுங்கள், ஆனால் மோடி உருவபொம்மையை எரிக்காதீர்கள்: முதல்வர் வேண்டுகோள்

ஞாயிறு, 2 ஜூலை 2023 (14:38 IST)
என்னுடைய உருவ பொம்மையை வேண்டுமானால் எரித்துக் கொள்ளுங்கள் ஆனால் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க வேண்டாம் என மணிப்பூர் முதல்வர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக கட்டுக்கடங்காத வன்முறை நிகழ்ந்து வருகிறது என்பதும் இதனை கட்டுப்படுத்த மணிப்பூர் மாநில பாஜக அரசு முடியாமல் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் மணிப்பூரில் பிரதமர் மோடியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு வரும் நிலையில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ஆதங்கம் தெரிவித்துள்ளார். 
 
மணிப்பூரில் நிலவும் சிக்கலான இந்த சூழலில் சில போராட்டக்காரர்கள் தலைவர்களின் உருவ பொம்மைகளை எரிப்பது சரியான நடவடிக்கை அல்ல என்று தெரிவித்தார் 
 
என்னுடைய உருவ பொம்மையை எரித்தால் கூட நான் வருந்த மாட்டேன் என்றும், ஆனால் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க வேண்டாம் என்றும் அவரை அப்படி என்ன செய்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
மணிப்பூரின் வளர்ச்சி பாதைக்கு தான் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்