பெண்ணின் உள்ளாடையை திருடிய விவகாரத்தில் கலவரம் ! 10 பேர் காயம்…20 பேர் கைது

சனி, 1 ஜூலை 2023 (21:10 IST)
குஜராத் மாநிலம் அலகாபாத்தில் ஒரு பெண்ணின் உள்ளாடையை இளைஞர் ஒருவர் திருடிச் சென்ற விவகாரத்தில் இரு பிரிவினர் இடையே கலவரம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகிறது.

குஜராத் மா நிலம் அலகாபாத் தண்டூகா தாலூகாவில் உள்ள தண்டூகா என்ற கிராமத்தில்  பெண் உள்ளாடைகள் திருடப்பட்டது. இது தொடர்பாக ஒரேசாதியைச் சேர்ந்த இருபிரிவினர் இடையே கலவரம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறியுள்ளதாவது:

ஜூன் மாதம் 27 ஆம் தேதி 30 வயது பெண் ஒருவர் தன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 31 வயது நபர் தனது உள்ளாடைகளை திருடியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தினமும் புது உள்ளாடைகளை துவைத்து காய வைத்தாலும் அவை மாயமானதால், இதைத் திருடுபவர்களை பிடிக்க திட்டமிட்டார்.

அதன்படி, பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் பெண்ணின் உள்ளாடையை திருடும்போது அதை அப்பெண் தன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதையடுத்து அப்பெண் அந்த இளைஞரிடம் சண்டை போட்டுள்ளார். அந்த நபர் அப்பெண்ணிடம் அத்துமீறியதாக தெரிவிக்கப்பட்டது.

இதில், இரு தரப்பைச் சேர்ந்த உறவினர்கள்  இடையே  மோதல் ஏற்பட்டு கலவரம் உருவானதீல் 10 பேர் காயமடைந்ததாகவும், 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்