மணிப்பூரில் ராகுல் காந்திக்கு தடையா? பரபரப்பு தகவல்..!

வியாழன், 29 ஜூன் 2023 (14:06 IST)
மணிப்பூரில் கடந்த சில வாரங்களாக கலவரம் நீடித்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மணிப்பூர் சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மணிப்பூரில் ராகுல் காந்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மணிப்பூரில்  கலவரம் நடந்து வரும் நிலையில் ராகுல் காந்தி கலவரம் நடந்த பகுதிக்கு சென்ற போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. 
 
ணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ராகுல் காந்தியின் பயணத்தை தடை செய்வது சந்தர்ப்பவாதம் என விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ராகுல் காந்திக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் அவரது கான்வாய் மட்டுமே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்