ராகுல் காந்தியின் மணிப்பூர் வருகைக்கு மாணவர் சங்கம் எதிர்ப்பு: என்ன காரணம்?

வியாழன், 29 ஜூன் 2023 (16:12 IST)
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கலவர பூமியாக இருக்கும் மணிபூருக்கு ராகுல் காந்தி சென்றிருந்த நிலையில் அவரது வருகைக்கு மணிப்பூர் மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
 மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சி செய்து வரும் நிலையில் அங்கு திடீரென கலவரம் வெடித்துள்ளது. இதனை அடுத்து அங்கு இணையதளங்கள் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் சென்ற நிலையில் அவரது கான்வாய் வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மணிப்பூர் கலவரம் குறித்து இரண்டு நாள் பயணமாக சென்றிருக்கும் ராகுல் காந்திக்கு மணிப்பூர் மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளது
 
மணிப்பூரில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காங்கிரஸ் தான் காரணம் என்றும் ராகுல் காந்தி இங்கு வருவதை எதிர்க்கிறோம் என்றும் அந்த அறிக்கைஇயில் கூறப்பட்டுள்ளது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்