மகாராஷ்டிராவை அடுத்து இன்னொரு மாநிலத்திலும் ஊரடங்கு: எந்த மாநிலம் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (07:59 IST)
தமிழகம் கேரளா மகாராஷ்டிரா உள்பட 5 மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அந்த மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளது, என்பதும் இந்த அறிவுறுத்தலை கணக்கில் கொண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே
 
மகாராஷ்டிராவில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பரவல் இருந்து வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து மத்தியபிரதேச மாநிலத்திலும் ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இன்று அல்லது நாளை முதல் இந்தூர், போபால் உள்ளிட்ட ஒரு சில நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து ரயில் பேருந்து விமானம் மூலம் வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் லாரிகளுக்கு தடை இல்லை என்றும் ஆனால் அனைத்து ஓட்டுநர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்