கொரோனாவுக்கு எதிராக மீண்டும் ஊரடங்கு அஸ்திரத்தை கையில் எடுத்த அரசு!

வெள்ளி, 12 மார்ச் 2021 (09:22 IST)
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாள் ஒன்றிற்கு 20 ஆயிரத்திற்கு அதிகமான பேருக்கு புதிதாக கொரொனா உறுதி செய்யப்படுகிறது. 
 
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக வரும் திங்கள் (மார்ச் 15 ஆம் தேதி) முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உணவகங்கள் 9 மணி வரை மட்டுமே இயங்கவும், உணவு டெலிவரிகள் இரவு 10 மணி வரை மட்டுமே அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்