மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் சுமார் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (21:35 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் சுமார் 60,000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியாவில் மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிர மாநிலம் என்பதும் இந்தியாவின் மொத்த பாதிப்பில் பாதிக்குமேல் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 59 ஆயிரத்து 907 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 30 ஆயிரத்து 296 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று ஒரே நாளில் 322 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த கொரோனாவால் பாதிப்பு 31,73,261என்றும் தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் 5,01,559 என்றும் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் 26,13,627 என்றும் மொத்தமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 56,652 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்