மக்களிடம் கட்டுப்பாடு இல்லை: கொரோனா குறித்து நீதிபதி கவலை

புதன், 7 ஏப்ரல் 2021 (20:40 IST)
மக்களிடம் கட்டுப்பாடு இல்லாததால் தான் தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிகவும் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தான் கொரோனா வைரஸ் அளவுக்கு அதிகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது
 
குறிப்பாக தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளும் பொதுமக்களும் தனிமனித இடைவெளியை சுத்தமாக பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மக்களிடம் கட்டுப்பாடு இல்லாததால் தான் கொரோனா வைரஸ் பரவலுக்கு அதிக வாய்ப்பாக அமைந்துவிடும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்
 
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த கவலையை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்