கிறிஸ்தவர்களாய் மாறிய கொஞ்ச நாளில் மீண்டும் இந்துக்களான மக்கள்! – மத்திய பிரதேசத்தில் சுவாரஸ்யம்!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (14:56 IST)
சமீப காலமாக கட்டாய மதமாற்றம் குறித்து வட மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் நிலையில் மத்தியபிரதேசத்தில் கிறிஸ்தவர்களாய் மாறிய மக்கள் மீண்டும் இந்துக்களாக மாறியுள்ளனர்.

வட மாநிலங்களில் சமீப காலமாக பலர் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்படுவதாக தொடர் புகார்கள் நிலவி வருகிறது. நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கட்டாய மதமாற்றம் நடைபெற்றதாக கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் கிறிஸ்தவர்களாய் மாறிய சில நாட்களிலேயே மக்கள் பலர் மீண்டும் இந்துவாக மாறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 300 பேர் இந்து மதத்திற்கு திரும்பிய நிலையில் பாகேஷ்வர் தம் பீடாதிபதி முன்னிலையில் அவர்களுக்கு மதமாற்ற சடங்குகள் நடைபெற்றுள்ளன. அதில் எந்த தூண்டுதலின் பேரிலும் மதம் மாறுவதில்லை என அவர்கள் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த மக்களுக்கு பணம், வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை காட்டி தூண்டியதன் பேரில் அவர்கள் மதம் மாறியதாகவும், சில நாட்களிலேயே தவறை உணர்ந்ததால் மீண்டும் இந்து மதம் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்