ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13, 20 ஆகிய இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெற இருப்பதால், அங்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரன், முதல்வரின் சகோதரர் வசந்த் சோரன் ஆகிய மூவரும் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய இரண்டு கட்சிகள் 70 தொகுதிகளில், மீதமுள்ள 10 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 35 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வெளியிட்டுள்ளது. அதில், முதல்வர் ஹேமந்த் சோரன் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற பார்கைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
அதேபோல, அவரது மனைவி கல்பனா கண்டா தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹேமந்த் சோரனின் சகோதரர் வசந்த் சோரன் தும்கா தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வரின் குடும்பத்தில் இருந்து மூன்று பேர் தேர்தலில் போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.