பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

Siva

திங்கள், 8 ஜூலை 2024 (22:39 IST)
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் அளித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்க துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கும் முன் அனைத்து அம்சங்களையும் உயர்நீதிமன்றம் ஆராயவில்லை- அமலாக்கத்துறை மனுவில் புகார் அளித்துள்ளது. எனவே ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 45 பிரிவின் படி ஹேமந்த் சோரன் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என கூறி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் அளித்தது என்ற நிலையில் தற்போது  அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளதால் இந்த மனு மீதான தீர்ப்பை பொறுத்தே  ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா? என்பது தெரியவரும்.
 
முன்னதாக பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால்  முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் சம்பய் சோரன் என்பவர் முதல்வராக பதவியேற்றார் என்பதும்  ஹேமந்த் சோரன் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்