மீண்டும் இந்தியாவை குறி வைக்கும் ஜெய்ஷ் இ மொஹமத்? – உளவுத்துறை எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (11:59 IST)
இந்தியாவில் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களை செய்த ஜெய்ஷ் இ மொஹமத் அமைப்பு மீண்டும் இந்தியாவை குறி வைப்பதாக உளவு துறை எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகளில் முக்கியமானது ஜெய்ஷ் இ மொஹமத் பயங்கரவாத அமைப்பு, லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகளோடு இதற்கு தொடர்பு உள்ளது. மேலும் முந்தைய காலகட்டங்களில் காஷ்மீரின் உரி ராணுவ தள தாக்குதல், புல்வாமா தாக்குதல், 2001 பாராளுமன்ற தாக்குதல் போன்றவற்றில் இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளது.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா சிறை பிடித்திருந்த தலீபான்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் 100 ஜெய்ஷ் இ மொஹமத் அமைப்பினரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் வழியாக ஜம்மு – காஷ்மீரில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபட திட்டமிடுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்