நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

Mahendran

வெள்ளி, 28 ஜூன் 2024 (20:07 IST)
மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா, சட்டமன்றத்தில் நாளை தாக்கலாகிறது என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் தொடர்பான தண்டனைகள் கடுமையாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருள்கள் தமிழகத்தில் அதிகமாக நடமாடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 60 பேர்களுக்கு மேல் உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதுமட்டுமின்றி கஞ்சா உள்பட போதைப் பொருள்களும் அதிகமாக நடமாடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிரடியாக நாளை சட்டமன்றத்தில் ஒரு புதிய மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார் 
 
போதைப்பொருள் விற்பனைகளுக்கான தண்டனை போதுமானதாகவும் கடுமையானதாகவும் இல்லை என்றும் தண்டனைகளை கடுமையாக்கி, குற்றங்களையும் முற்றிலும் தடுக்க முதல் கட்டமாக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 இல் திருத்த மசோதா நாளை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்