பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

Mahendran

வெள்ளி, 28 ஜூன் 2024 (20:00 IST)
பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியவர்களை அடுத்தடுத்து சரத்குமார் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி திருமண அடுத்த மாதம் நடைபெற இருப்பதை அடுத்து பிரபல அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்களுக்கு சரத்குமார் திருமண அழைப்பிதழை அளித்து வருகிறார். 
 
அந்த வகையில் சரத்குமார் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை அளித்த போது மகளுக்கும் மருமகனுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். 
 
இதனை எடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடமும் சரத்குமார் அழைப்பிதழை கொடுக்க அவரும் இருவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 
அடுத்த மாதம் வரலட்சுமி திருமணம் தாய்லாந்தில் நடைபெற இருப்பதாகவும் அதனை அடுத்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்