இந்தியாவில் பாதி பேருக்கு தடுப்பூசி போட்டாச்சு! – மத்திய அரசு தகவல்!

வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (09:18 IST)
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் 50% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கடந்த ஜனவரி முதலாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு, ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட 5 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மூன்றாம் அலை பரவலுக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் இந்தியாவில் தகுதி வாய்ந்த நபர்களில் 50% பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்