பைபிள் படிப்பதால் தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திடாத ஜெகன்மோகன்: சந்திரபாபு நாயுடு

Siva
ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (11:15 IST)
முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பைபிள் படிப்பதால் தான் தேவஸ்தான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளார் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ள லட்டு பிரசாதம் பற்றி குற்றச்சாட்டு எழுந்ததை மறுத்த ஜெகன் மோகன் ரெட்டி, திருமலைக்கு செல்ல இருப்பதாக கூறியிருந்தார். ஆனால், தேவஸ்தான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் தான் ஜெகன் மோகன் ரெட்டி திருமலைக்கு அனுமதிக்கப்படுவார் என்று தேவஸ்தான தரப்பில் கூறப்பட்டது.

இந்த சூழலில், திருமலைக்கு செல்லும் தனது திட்டத்தை ரத்து செய்த ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு தான் திருமலைக்கு செல்ல தடை செய்ததாக குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி கோவிலுக்கு செல்வதை யாரும் தடுக்கவில்லை. அவர் தேவஸ்தான நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்றுதான் அறிவுறுத்தப்பட்டது.

நான்கு சுவர்களுக்குள் பைபிள் படிப்பதாக ஜெகன் மோகன் ரெட்டி கூறியதால், திருமலைக்கு வந்தால் தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என்பதால் தான் அவர் வரவில்லை" என்று கூறினார்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்