எங்க வேணாலும் யோகா செய்யலாம்! – 17 ஆயிரம் அடி உயரத்தில் ராணுவ வீரர்கள் யோகா!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (10:56 IST)
இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்தோ – திபேத் ராணுவ வீரர்கள் 17 ஆயிரம் அடி உயர பனிமலை பகுதியில் யோகா செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தொடங்கிய யோகா உடற்பயிற்சி முறை தற்போது பல நாடுகளிலும் மக்களால் பின்பற்றப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக யோகா தினம் பிரம்மாண்டமாக நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் யோகா தினம் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. மைசூரு அரண்மனையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார்.

சர்வதேச யோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்தோ – திபேத் ராணுவ வீரர்களும் யோகா செய்துள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் லடாக் பனிமலை சிகரங்களுக்கு நடுவே இந்தோ – திபேத் ராணுவ வீரர்கள் யோகா செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்