டெல்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் குடியரசு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 26ல் கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல கலை நிகழ்ச்சிகளும், ராணுவ கண்காட்சியும் நடப்பதுடன், விழாவை காண 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கூடுவர்.
ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக 25 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதுபோல இந்த முறை 24 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என கூறப்பட்டுள்ளது. அத்ல் 19 ஆயிரம் பேர் மத்திய அரசின் அழைப்பின்படி கலந்து கொள்வார்கள். 5 ஆயிரம் பொதுமக்கள் டிக்கெட் பெற்றுக் கொண்டு விழாவை காணலாம். கொரோனா காரணமாக இந்த முறையும் வெளிநாட்டு தலைவர்கள் யாரும் குடியரசு தின விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.