விரைவில் இன்னும் ஒரு அறிக்கை: அதானி குறித்து ஹிண்டன்பர்க்..!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (09:57 IST)
அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் என்ற ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கை காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது என்பதை பார்த்தோம். இதன் காரணமாக உலக கோடிஸ்வரர் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து அதானி தற்போது 20 இடத்திற்கும் பின்னுக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் விரைவில் மேலும் ஒரு முக்கிய விவகாரத்தை அம்பலப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அது அதானி சம்பந்தப்பட்ட விவகாரமா அல்லது வேறு நிறுவனங்களின் விவகாரமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆய்வறிக்கையை வெளியிட்ட ஹிண்டன்பர்க் அடுத்த அறிவிப்பை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்