தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இடியுடன் மழை: வானிலை அறிக்கை..!

புதன், 22 மார்ச் 2023 (11:43 IST)
தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கோடை வெயில் கொளுத்த தொடங்கி இருக்கும் நிலையில் மழை பெய்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று நள்லிரவு முதல் ஒரு சில இடங்களில் மழை பெய்த நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி சேலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையை பொருத்தவரை மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்