உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் மீண்டும் பின்லாந்து முதலிடம்

செவ்வாய், 21 மார்ச் 2023 (23:08 IST)
உலகின் மகிழ்ச்சியான  நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

இந்த உலகில் வாழும் எல்லோருக்கும் மகிழ்ச்சி தேவைப்படுகிறது. அது எல்லோருக்கும் இருக்கும் சூழலைப் பொருத்து அமைகிறது.

இந்த நிலையில், தனி நபர் வருமான, சுதந்திரம், கல்வி, தாராள மனப்பான்மை, ஊழல் இல்லாத நிலை ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.நா., சபை வெளியிட்டுள்ளது.

அதில், இந்த ஆண்டும்  மகிழ்ச்சியான  நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது ஐரோப்பிய நாடான பின்லாந்து.

இப்படியலில், 2 வது இடத்தை டென்மார்க்கும், 3 வது இடத்தை ஐஸ்லாந்தும், 4 வது இடத்தை இஸ்ரேலும், 5 வது இடத்தை நெதர்லாந்தும் பிடித்துள்ளன.

இதையடுத்து, ஸ்வீடன்,ம் நார்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பெர்க், நியூசிலாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

இப்பட்டியலில், உலக வல்லரசான அமெரிக்கா 15 வது இடத்தையும், இந்தியா 126 வது இடத்தையும் பாகிஸ்தான் 108 வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் 137 வது இடத்தையும் பிடித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்