உத்தரபிரதேச சந்தை ஒன்றில் அனுமதியின்றி நடைபாதையில் கடை வைத்திருந்த விவசாயி ஒருவரின் காய்கறி கடையை அரசு அதிகாரி ஒருவர் கார் ஏற்றி சேதப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் விளைந்த காய்கறிகளை எடுத்து வந்து சந்தையில் நடை பாதை அருகே கடை போட்டு விற்பனை செய்துள்ளார்
நடைபாதையில் கடை போட கூடாது என்று அரசு அதிகாரி ஒருவர் அவரை எச்சரித்து உள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து காய்கறி கடை நடத்தி வந்ததால் ஆத்திரமடைந்த அந்த அரசு அதிகாரி, உடனே தன்னுடைய காரை விவசாயிகள் மீது ஏற்றி அதில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை சேதப்படுத்தினார். இது குறித்த வீடியோவை இணையதளங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
ஒரு விவசாயி அந்த காய்கறியை உற்பத்தி செய்ய எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார், ஆனால் அந்த காய்கறியை ஒரே வினாடியில் அரசு அதிகாரி கார் ஏற்றி சேதப்படுத்தியது பெரும் தவறு என்றும், நடை பாதையில் கடை போட்டதற்காக அவரிடம் சட்டப்படி அபராதம் வசூல் செய்து இருக்க வேண்டும் அல்லது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், காய்கறிகளை தனது காரால் சேதப்படுத்த அரசு அதிகாரிக்கு யார் உரிமை கொடுத்தது? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்
இதனையடுத்து அந்த அரசு அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி வருவதால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது