மக்களே... ஜிஎஸ்டி பிரச்சனை தீர்ந்துவிட்டதாம்: மத்திய அரசு!!

Webdunia
புதன், 18 அக்டோபர் 2017 (18:04 IST)
ஜிஎஸ்டி வரி முறைகள் கடந்த ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் ஒரே வரி என்ற நோக்கத்துடன் இது அமல் செய்யப்பட்டது.


 
 
இந்நிலையில், ஜிஎஸ்டி அமலால் வந்த ஆரம்பகட்ட சிரமங்கள் தீர்ந்துவிட்டதாக பொருளாதார விவகாரத்துறை செயலர் எஸ்.சி.கார்க் கூறியுள்ளார்.
 
ஜிஎஸ்டி புதிய வரிவிதிப்பு முறையால் எந்த பொருளுக்கு எவ்வளவு வரி என்பது குறித்த குழப்பம் பொதுமக்கள் மத்தியிலும் வியாபாரிகள் மத்தியிலும் நிலவியது.
 
ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் வந்த தற்காலிக சிரமங்கள் தீர்ந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதோடு, உற்பத்தி துறை இதுவரை இல்லாத அளவிற்கு 3.1 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்