இந்தியாவைவிட பாகிஸ்தானே மேல்: அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!!
திங்கள், 16 அக்டோபர் 2017 (15:35 IST)
உலகில் உள்ள முக்கிய நகரங்களில் பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் எவை என்பதை கண்டறிய தாம்சன் ரியூட்டர்ஸ் பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தியது.
இந்த நிறுவனம் மெற்கொண்ட ஆய்வுகளின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாய் உள்ளது. இந்திய தலைநகர் டெல்லி பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் எகிப்தின் தலைநகர் கெய்ரோவும், இரண்டாம் இடத்தில் மெக்சிகோ நகர் தகாவும் உள்ளது. மூன்றாம் இடத்தை காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாஷா பெற்றுள்ளது.
இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவெனில், பாகிஸ்தான் தலைநகர் கராச்சி 9 வது இடத்தில் உள்ளது. இந்தியாவை ஒப்பிடும் போது பாகிஸ்தானில் பெண்கள் பாதுகாப்பகவே உள்ளனர்.
அதேபோல், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நாடுகளுடன் புதுடெல்லியும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.