இரட்டை இலை பிரச்சனையில் திடீர் திருப்பம்: தினகரன் மனு நிராகரிப்பு

செவ்வாய், 17 அக்டோபர் 2017 (09:08 IST)
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்று ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியும், தினகரன் அணியும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் இதுகுறித்த விசாரணையை நேற்று தேர்தல் ஆணையம் தொடங்கியது.



 
 
இருதரப்பிலும் சீனியர் வழக்கறிஞர்கள் வாதாடிய நிலையில் டிடிவி தினகரன் தரப்பினர் தாக்கல் செய்த புதிய மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. ஈபிஎஸ்-ஓபிஎஸ் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் குளறுபடி இருப்பதாகவும், அந்த பிரமாண பத்திரங்களில் உள்ள கையெழுத்துகளில் வித்தியாசம் இருப்பதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் தினகரனின் புதிய மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
ஆனால் இந்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. பிரமாண பத்திரங்களில் உள்ள கையெழுத்து குறித்து யாரையும் நேரில் அழைத்து விசாரணை செய்ய இயலாது என்றும் எழுத்துபூர்வமான ஆவணங்களை அளிக்கும்பட்சத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உறுதியாக கூறிவிட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தினகரனுக்கு பின்னடைவே என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்