விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

Siva

செவ்வாய், 7 ஜனவரி 2025 (12:17 IST)
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக போராட்டம் நடத்த திட்டமிட்டபோது அதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்றும் ஆனால் ஆளுநரை கண்டித்து தற்போது திமுக போராட்டம் நடத்துகிறது என்றும் அதற்கு மட்டும் காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகவும் பாட்டாளி மக்கள் கட்சி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து சமீபத்தில் பாமக போராட்டம் நடத்திய போது காவல்துறை அதற்கு அனுமதிக்கவில்லை. தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து பாமக போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக போராட்டம் நடத்துகிறது என்றும் இந்த போராட்டத்திற்கு மட்டும் காவல்துறை அனுமதி அளித்துள்ளது என்றும் ஆளுங்கட்சி போராட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் விதிகளை மீறி போராட்டம் நடத்துவார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி உத்தரவிட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்