இன்று காலை திபெத் மற்றும் நேபாள எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்ததாகவும், இன்னும் மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சீனாவில் உள்ள திபெத் பகுதிகளிலும், இந்தியாவில் உள்ள பீகார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், இடிபாடுகளில் சிக்கி இதுவரை 53 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.