பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், சமீப காலமாக பங்குச்சந்தை மிகுந்த மோசமாக சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேற்று சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து, முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், இன்று சுமார் 300 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
சற்றுமுன் சென்செக்ஸ் 295 புள்ளிகள் உயர்ந்து 78, 236 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை 112 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 732 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் டைட்டான், ரிலையன்ஸ், ஆசியன் பெயிண்ட், பிரிட்டானியா, அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல், அப்போலோ ஹாஸ்பிடல், விப்ரோ, ஹெச்சிஎல், டெக்னாலஜி, டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.