கணவருடன் நவராத்திரி நடனமாடிய 19 வயது இளம்பெண் மாரடைப்பால் பலி.. 4 மாதங்களுக்கு முன் தான் திருமணம்..!

Mahendran

செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (10:11 IST)
மத்திய பிரதேசத்தின் கார்கோன் நகரில் நடந்த ஒரு துயர சம்பவம், இளம் வயதினருக்கு ஏற்படும் மாரடைப்பு குறித்த அச்சத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. 
 
கார்கோன் நகரில் 19 வயது இளம் மணப்பெண், தனது கணவருடன் கர்லா நடனமாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சோனம் என்ற அந்த இளம் பெண், நடனமாடி சில நிமிடங்களில் சரிந்து விழுந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் முடித்த சோனம், தனது கணவருடன் நவராத்திரி கொண்டாட்டத்தில் பங்கேற்றபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. சோனம் திடீரென தரையில் விழுந்தவுடன், அது நடனத்தின் ஒரு பகுதி என்று அவரது கணவரும் உறவினர்களும் முதலில் நினைத்தனர். 
 
ஆனால், அவள் நீண்ட நேரம் அசைவின்றி இருந்ததால், பதற்றத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சோனமின் குடும்பத்தினர், அவர் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார் என்றும், அவருக்கு எந்தவிதமான உடல்நல குறைபாடும் இருந்ததில்லை என்றும் கூறியுள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்