திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அபாயம் அதிகம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

Mahendran

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (18:00 IST)
வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமைகளில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்த அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், சில முக்கிய காரணங்களால் திங்கட்கிழமை மிகவும் ஆபத்தான நாளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
விடுமுறைக்குப் பிறகு, திங்கட்கிழமை மீண்டும் வேலைக்கு செல்லும்போது மனித உடலில் உள்ள உயிரியல் கடிகாரம் அல்லது சுழற்சி மாறுபடும். இது ஹார்மோன்களை பாதித்து, மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தலாம்.
 
வார இறுதியில் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் திங்கட்கிழமை அதிக வேலைப்பளு உள்ள பணிச்சூழலுக்கு திரும்பும்போது ஏற்படும் மன அழுத்தம், மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
 
சிலர் வார இறுதி நாட்களில் மது அருந்துதல், விருந்துகளில் பங்கேற்று அதிகமான இறைச்சி, எண்ணெய் உணவுகள் சாப்பிடுவது போன்ற காரணங்களால், அடுத்த நாள் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரித்து மாரடைப்பு ஏற்படலாம்.
 
திடீர் நெஞ்சு வலி, நெஞ்சுப் பகுதியில் அழுத்தம், வாந்தி, மயக்கம், தோள்பட்டை மற்றும் கைகளில் வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை மாரடைப்பின் முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம். இவ்வாறு விஞ்ஞானிகளின் ஆய்வு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்