ஷட்டில் பேட்மிண்டன் விளையாடும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு: 25 வயது ஐடி ஊழியர் மரணம்!

Siva

திங்கள், 28 ஜூலை 2025 (16:30 IST)
ஹைதராபாத்தில் நாகோல் மைதானத்தில் ஷட்டில் பேட்மிண்டன் விளையாடி கொண்டிருந்த 25 வயது இளைஞர் ஒருவர், திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
குண்ட்லா ராகேஷ் என அடையாளம் காணப்பட்ட இந்த இளைஞர், ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர். இவர் நேற்று இரவு 8 மணியளவில் நாகோல் மைதானத்தில் இரட்டையர் ஷட்டில் பேட்மிண்டன் போட்டியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது ஷட்டில் காக்கை எடுக்க குனிந்த சில நொடிகளிலேயே அவர் திடீரென மைதானத்தில் சரிந்து விழுந்தார். சக வீரர்கள் உடனடியாக அவருக்கு அருகில் ஓடி சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்க முயற்சித்தார்.
 
இதையடுத்து ராகேஷ் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் "இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டதாக" மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
 
இவ்வளவு இளம் வயதிலும், சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருந்த ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது, விளையாடும்போது அல்லது உடற்பயிற்சி கூடங்களில் இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்