திடீர் மாரடைப்பு சம்பவங்களுக்கு DJ நிகழ்ச்சிதான் காரணமா? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Prasanth K

வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (13:01 IST)

நாட்டின் பல பகுதிகளில் திருவிழா, வீட்டு விசேஷங்களில் நடனமாடும் பலர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போகும் நிலையில் அதற்கு காரணம் டிஜே இசைதான் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 

இந்தியா முழுவதும் கடந்த சில காலங்களில் திருவிழா நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷங்களில் நடனமாடும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜெர்மன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இவ்வாறான மரணங்களுக்கு காரணம் டிஜே இசைதான் என கண்டறியப்பட்டுள்ளது.

 

தற்போது பல விசேஷங்களில் அதிக ஒலியுடன் பாடல்களை ஒலிக்கவிடக்கூடிய டிஜே இசை என்னும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அவ்வாறாக ஒலிக்கப்படும் அதிக சத்தமுடைய இசை வரம்பு மீறும்போது இதயத்துடிப்பு மாறுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதனால் மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதுடன், ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

 

டிஜே சத்தத்தை 100 டெசிபலுக்கு மேல் கேட்கும் குழந்தைகளுக்கு காது கேளாமை பிரச்சினை ஏற்படுவதுடன், கர்ப்பிணி பெண்களையும் இந்த அதிக சட்டம் பாதிப்பதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்