காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி காலமானார்

Webdunia
ஞாயிறு, 28 ஜூலை 2019 (07:51 IST)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார். அவருக்கு வயது 77. கடந்த சில நாட்களாக நிமோனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெய்பால் ரெட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஜெய்பால் ரெட்டியின் மறைவிற்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா என்ற மாவட்டத்தில்  ஜெய்பால் ரெட்டி பிறந்தார். அவர் பிறந்து 18 மாதங்கள் ஆனபோது போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் விடா முயற்சியுடனும், தன்னம்பிக்கையுடன் கல்வி பயின்று முதுகலை பட்டம் பெற்றார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் பணியாற்றிய ஜெய்பால் ரெட்டிக்கு மன்மோகன்சிங் ஆட்சியின்போது மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது. 
 
மறைந்த ஜெய்பால் ரெட்டி அவர்களுக்கு லட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். ஜெய்பால் ரெட்டி மறைவை அடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அவரது இல்லத்தில் காத்திருக்கின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்