இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் மாற்றம் குறித்த அறிவிப்பும் நாளை வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், அண்ணாமலை இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:
"மத்திய உள்துறை அமைச்சர் இன்று சென்னை வருவது உறுதி. அதேபோல் நாளை வரை அவர் தமிழகத்தில் தான் இருப்பார். பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்வார் என்பது உறுதி. ஆனால், அவரது வருகை எதற்காக என்பது குறித்து நாளை நாங்கள் அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களுக்கு செய்தி தருவோம். ஆனால், ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். தமிழக பாஜக தலைவர் மாற்றத்திற்கும் அமைச்சர் அமித்ஷா வருகைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து, சென்னை வரும் அமித் ஷா, தமிழக தலைவர் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட மாட்டார் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால், அதே நேரத்தில், அதிமுகவுடன் கூட்டணி, அதிமுக தலைவர்களுடன் இணக்கமாக அண்ணாமலை நடந்து கொள்ள வேண்டும் போன்றவைகளை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்துவார் என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.