கோவையில் தேர்வு எழுத சென்ற பழங்குடி மாணவியை மாதவிடாய் காரணமாக வெளியே அமர வைத்த விவகாரத்தில் பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவை அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பழங்குடி மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார். தற்போது பள்ளித் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் மாணவிக்கு முதல் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியே வைத்து தேர்வு எழுதும்படி செய்யப்பட்டார்.
இதை அவரது தாயார் வீடியோ எடுத்து வெளியிட்டு நியாயம் கேட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, மாணவியின் தாயார்தான் அவர் மாதவிடாயில் உள்ளதால் தொற்று ஏற்படுமென தனியாக அமரவைத்து தேர்வு எழுத சொல்லி கேட்டதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். மாணவியின் தாயாரோ நான் தனியாக அமரவைத்துதான் தேர்வு எழுத சொன்னேன். வெளியே அமரவைக்க சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த களேபரங்களுக்கு நடுவே, இதுகுறித்து நடவடிக்கை எடுத்த பள்ளியின் தாளாளர், அப்பள்ளியின் தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K