அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள்: நடத்தை விதிகளில் புதிய திருத்தம்!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (11:08 IST)
தேர்தலின் போது அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளில் புதிய திருத்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதை அடுத்து இதுகுறித்து நடத்தை விதிகளில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது 
 
அந்த கடிதத்தில் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளிக்கும் போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரத்தையும் வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்றும் அவ்வாறு வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரத்தை விளக்குவதை கட்டாயமாக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்