சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனை: டுவிட்டரில் பாராட்டிய பிரதமர் மோடி பாராட்டு

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (10:42 IST)
சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனை செய்த இளைஞர் ஒருவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 
 
பெங்களூரில் லட்சுமி நாராயணன் என்பவர் தனது வீட்டின் அருகே மைதானத்தில் சில வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் 
 
அப்போது அவர் அந்த கிரிக்கெட் விளையாட்டை சமஸ்கிருதத்தில் வர்ணனை செய்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரலான நிலையில் பிரதமர் மோடி இந்த வீடியோவை பார்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த இளைஞருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் 
 
சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனை செய்வதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன் என்றும் இந்த முயற்சியை மேற்கொண்ட அந்த இளைஞருக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்
 
பிரதமர் மோடியின் இந்த பாராட்டிற்கு ஆதரவு எதிர்ப்பு இரண்டும் கலந்து கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்