தேர்தல் பிரச்சாரத்தில் AI டெக்னாலஜியை பயன்படுத்தலாமா? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!

Siva
வியாழன், 16 ஜனவரி 2025 (16:56 IST)
தேர்தல் பிரச்சாரத்தில் AI சம்பந்தப்பட்ட டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் அதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் மீது ஆடியோ மற்றும் வீடியோ வெளியிடும்போது, AI டெக்னாலஜி பயன்படுத்தி இருந்தால், அது பற்றிய குறிப்பு அந்த வீடியோ அல்லது ஆடியோவில் இடம் பெற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், AI டெக்னாலஜியை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தும் போது பொறுப்புடன் மற்றும் வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கட்சிகளும் கண்ணியம் மற்றும் நல்லொழுக்கத்தை பேணி காக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கை கூறியுள்ளது.

அத்துடன், தேர்தல் நடைமுறைகளை தவறாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் கடைபிடிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்