ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் 58 வேட்பாளர்கள்.. இன்று வேட்புமனு பரிசீலனை..!

Mahendran

சனி, 18 ஜனவரி 2025 (08:45 IST)
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
 
நேற்று கடைசி நாளில் திமுக வேட்பாளரும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும் மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 58 பேர் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று முதல் வேட்பாளர்களின் பரிசீலனைகள் செய்யப்படவுள்ளதாகவும், வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஜனவரி 20 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்பின் இறுதி வேட்பாளர் பட்டியல், வேட்பாளர்களின் சின்னத்துடன் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி போட்டியிடுகிறார். இந்த இருவரைத் தவிர, மற்ற வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
 
குறிப்பாக, நேற்று ஒரே நாளில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை சேர்த்து மொத்தம் 49 பேர் மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்