டெல்லியில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் - பிரதமர் மோடி ’டுவீட்’

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (14:12 IST)
டெல்லியில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் - பிரதமர் மோடி ’டுவீட்’

வட கிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுபடுத்த காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமித் ஷாவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்றனர். இதில் பேசிய கெஜ்ரிவால், டெல்லி கலவரத்தை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை, அதனால் ராணுவத்தை களம் இறக்க வேண்டும்” என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்தார். மேலும் டெல்லி பொதுமக்கள் அமைதி காக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இதுகுறித்து, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :  டெல்லியில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள வன்முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளேன்.டெல்லியில் இயல்பு நிலை திரும்ப கவால்துறையினரும் அதிகாரிகளும் முயற்சித்து வருகின்றனர்.  டெல்லியில் விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும். சகோதர சகோதரிகள் அனைவரும் அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்