டெல்லி வன்முறை: இரண்டு வழக்குகள் இன்று விசாரணை

புதன், 26 பிப்ரவரி 2020 (10:43 IST)
டெல்லி வன்முறை: இரண்டு வழக்குகள் இன்று விசாரணை
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட இந்த வன்முறையில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளதாகவும் 200 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி வன்முறை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் 2 வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது
 
டெல்லியில் உள்ள வடகிழக்கு பகுதியில் நடந்த கலவரம் தொடர்பாக ஒரு வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ளது. வடகிழக்கு டெல்லியில் நேற்று நடந்த கலவரம் தொடர்பான மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்றும் , அதுமட்டுமின்றிஒ, ஷாகின் பாக் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை மீதும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறும் என்றும் சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த வழக்கின் விசாரணையின்போது அதிரடி உத்தரவு ஏதாவது பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்