முன்னாள் முதல்வரின் நிபந்தனை ஜாமீனை தளர்த்திய நீதிமன்றம்

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (18:48 IST)
திறன்மேம்பாடு  ஊழல் வழக்கில் கைதாகி, சிறையில் இருந்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அவருக்கான நிபந்தனை ஜாமீனை தளர்த்தியுள்ளது உயர் நீதிமன்றம்.

சந்திரபாபு நாயுடு ரூ. 371 கோடி திறன் மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட  நிலையில்  கடந்த மாதம் 9ஆம் தேதி முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்டார்
.
இதையடுத்து  உயர் நீதிமன்றத்தில் அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்தது.

இந்த நிலையில் திறன்மேம்பாடு  ஊழல் வழக்கில் கைதாகி, சிறையில் இருந்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அவருக்கான நிபந்தனை ஜாமீனை    இன்று  தளர்த்தியுள்ளது உயர் நீதிமன்றம்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு 53 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் கடந்த  நவம்பர் 28 ல் ராஜமுந்திரி சிறை கண்காணிப்பாளர் முன்பு ஆஜராக வேண்டும் என கடந்த மாதம் அக்டோபர் 31 ஆம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்