பாஜக கூட்டணியில் இருந்து விலகல்- பிரபல நடிகர் அறிவிப்பு

வியாழன், 5 அக்டோபர் 2023 (13:34 IST)
\

பிரபல நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், ‘பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக’  அறிவித்துள்ளார்.
 
 

அடுத்தாண்டு நமது நாட்டில்  நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி ஒரு சில கட்சிகளுடன் இணைந்து  மூன்றாவது அணி அமைக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

இந்த  நிலையில், பிரபல தெலுங்கு நடிகரும் 'ஜனசேனா' கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், ‘பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக’  அறிவித்துள்ளார். மேலும், சமீபத்தில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ‘சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைக்கவுள்ளதாகவும் ‘பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்