1.08 கோடியை தாண்டிய பாதிப்பு! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (10:05 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
 
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,08,02,591 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,54,823 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,96,308 ஆக உயர்ந்துள்ளது. 
 
அதோடு, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,408 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15,853 பேர் குணமடைந்துள்ளதாகவும், 120 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்