விஜய் கெட்டப்பில் இயக்குனர் செல்வராகவன் – வைரலாகும் பேஸ் ஆப் வீடியோ!

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (08:44 IST)
செல்வராகாவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

பேஸ் ஆப் என்ற செயலி இப்போது புதிய ட்ரண்டாக உருவாகி வருகிறது. இதன் மூலம் வேறொருவரின் முகத்தில் மற்றொருவரின் முகத்தைப் பொறுத்தி வெளியிட முடியும். பிரபலங்களின் வீடியோக்களில் இதுபோல செய்யப்படும் வீடியோக்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பல காட்சிகளில் செல்வராகவனின் முகத்தைப் பொறுத்தி ஒரு வீடியோவை ரசிகர்கள் வெளியிட, அதை தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார் செல்வராகவன். இந்த வீடியோ இப்போது கவனத்தை பெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்