கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்றும், மழை வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். ஒரு சிலர் வீடுகளை இழந்து உள்ளதாகவும், வீடுகளில் உள்ள பொருள்களை இழந்ததாகவும் கூறப்படுகிறது.