டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு: இந்திய அணியில் யார் யார்?

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (09:09 IST)
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு: இந்திய அணியில் யார் யார்?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது என்பது ஏற்கனவே தெரிந்ததே.
 
இன்று காலை 9.30 மணிக்கு டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் சற்று முன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இந்த டாஸில் இங்கிலாந்து கேப்டன் வெற்றி பெற்றதை அடுத்து அவர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலலியில் இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்கள் குறித்த தகவல் பார்ப்போம்.
 
இங்கிலாந்து: டம் சிபிலே, பர்ன்ஸ், டான் லாரன்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஒலிபோப், ஜாஸ் பட்லர், டாம் பெஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்
 
இந்தியா: ரோஹித் சர்மா, கில், புஜாரே, விராத் கோஹ்லி, ரஹானே, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், பும்ரா, இஷாந்த் சர்மா, நடீம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்